கைது 
செய்திகள்

பென்னாகரம் அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

பென்னாகரம் அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டியில் மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படை குழு மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மகேஸ்வரி (வயது 38) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய வீட்டில் இருந்து 403 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர்.