விபத்து பலி 
செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது72). ஓய்வுபெற்ற ஆசிரியர். .நேற்று இரவு 7 மணி அளவில் செல்லத்துரை பட்டுக்கோட்டைக்கு வந்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பொன்னவராயன்கோட்டை மாடர்ன் ரைஸ் மில் அருகே அவர் சென்ற போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த மோட்டார் சைக்கிள், செல்லத்துரை சென்ற மொபட் மீது மோதியது. இ

தில் படுகாயமடைந்த செல்லத்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லத்துரை இறந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT