போக்குவரத்து மாற்றம் 
செய்திகள்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இடங்கள்

தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் செனோடாப் சாலை சந்திப்பில் ஜி.கே.எம்.பாலம் நோக்கி கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் பாயின்ட், எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லாம்.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை அண்ணாசாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பு (நந்தனம் சிக்னல்) சந்திப்பில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தேவர் பேரவையின் தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அண்ணாசாலையின் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் திசைகளில் போக்குவரத்து மெதுவாக செல்லும். பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் நாளை காலை 7 மணி முதல் சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்காணும் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

1. சைதாப்பேட்டையில் இருந்து டர்ன் புல்ஸ் பாயின்ட் நோக்கி சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் இணைப்பு சந்திப்பில் லிங்க் ரோடு, மாடல் ஹட்மென்ட் ரோடு, விஎன் ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டாமாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு எஸ்.ஐ.டி. மற்றும் கே.பி.தாசன் சாலை வழியாக செல்லலாம்.

2. சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் நந்தனம் சிக்னல் சந்திப்பில் வி.என்.ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டமாஸ் ரோடு, எஸ்.ஐ.டி. மற்றும் கே.பி. தாசன் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

3 தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் செனோடாப் சாலை சந்திப்பில் ஜி.கே.எம்.பாலம் நோக்கி கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் பாயின்ட், எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லாம்.

4 அண்ணாசாலை - செனோடாப் சாலை வழியாக ஜி.கே.எம்.பாலம் செல்லலாம். கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக வலதுபுறம் நோக்கி டி.டி.கே. ரோடு வழியாக செல்லலாம்.

5 சேமியர்ஸ் சாலையில் இருந்து சைதாப்பேட்டை செல்ல விரும்பும் வாகனங்கள் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக காந்தி மண்டபம் பாயிண்ட், எஸ்.வி.படேல் சாலை மார்க்கமாக அண்ணாசாலையை அடையலாம்.

SCROLL FOR NEXT