பிரதமர் மோடி அஞ்சலி செலுத்திய காட்சி 
செய்திகள்

பாராளுமன்ற தாக்குதல்... உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

பாராளுமன்ற தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 14 பேர் பலியானார்கள். இவர்களில் 5 பேர் பயங்கரவாதிகள், 9 பேர் பாதுகாப்பு படையினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

இதனை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.