மணல் கடத்தல் 
செய்திகள்

பாபநாசத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

பாபநாசத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் திருப்பாலைத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். அப்போது டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்ததில் மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.