தற்கொலை 
செய்திகள்

பந்தலூர் அருகே முதியவர் தற்கொலை

பந்தலூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பந்தலூர்:

பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம்(ரேஞ்ச்-1) பெருங்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 70). இவருடைய மனைவி பார்வதி. இவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. இதனால் கணேசன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.