பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவராங்காட்டில் சரவணன் (வயது 30) என்பவர் வீடு கட்டி வருகிறார். இவர் சம்பவத்ன்று இரவு தனது மனைவியுடன் தனது வீட்டை பூட்டி விட்டு மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.