மரணம் 
செய்திகள்

விசைத்தறி கூடத்தில் சிமெண்டு அட்டை மாற்றும் போது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

பள்ளிபாளையம் அருகே விசைத்தறி கூடத்தில் சிமெண்டு அட்டை மாற்றும் போது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 39), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இவர் அதே பகுதியில் உள்ள ராஜமாணிக்கம் என்பவரது விசைத்தறி கூடத்தில் சிமெண்டு அட்டை மாற்றும் போது, மேலே இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் ராமகிருஷ்ணன் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விட்டார். உடனே அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ராமகிருஷ்ணனுக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.