நகை பறிப்பு 
செய்திகள்

பல்லவராயன்பட்டி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பல்லவராயன்பட்டி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூரில் உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்த போத குருவின் மனைவி போதும்பொண்ணு (வயது56). இவர் நேற்று காலை 11 மணிக்கு பல்லவராயன்பட்டி அருகே சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போதும்பொண்ணு அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். பட்ட பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து வாலிபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT