விபத்து பலி 
செய்திகள்

பல்லடத்தில் பஸ் மோதி தொழிலாளி பலி

பல்லடத்தில் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் ரவி(வயது50). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்வதற்காக கோவை-திருச்சி மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவி இறந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.