கைது 
செய்திகள்

பாலமேடு பகுதியில் மணல் கடத்திய 4 பேர் கைது

பாலமேடு பகுதியில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் எர்ரம் பட்டி பகுதியில் பாலமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் அந்த பகுதியில் அனுமதியின்றி காளவாசல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாவிடமருதூரை சேர்ந்த ஜெயக்குமார் (26), அலங்காநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (28) என்பதும், அனுமதியின்றி மண் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து மணல் ஏற்றி வந்த 2 லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் பாலமேடு பகுதியில் ரோந்து சென்றபோது அனுமதியின்றி மணல் கடத்திய தனிச்சியத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகபாண்டி (30), ஜே.சி.பி. ஓட்டுனர் பாலமுருகன் (33) ஆகியோரை கைது செய்தனர். லாரி மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை பறிமுதல் செய்து பாலமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT