மரணம் 
செய்திகள்

பாலக்கோடு அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி

பாலக்கோடு அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கம்மநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சின்னதாய் (வயது 31). இவர் நேற்று தனது விவசாய நிலத்தில் உள்ள குப்பைகளை எரிக்க தீ வைத்துள்ளார். அப்போது காற்று வேகமாக அடித்ததால் குப்பைக்கு வைத்த தீ சின்னதாயின் சேலையில் பிடித்து கொண்டது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.