கோப்புப்படம் 
செய்திகள்

உயரதிகாரிகள் பெயரில் போலி போன் அழைப்புகள் - ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உயரதிகாரிகள் போல் பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய உளவுத்துறை ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக தொலைபேசி மற்றும் செல்போனில் உயரதிகாரிகள் பேசுவது போல் பாகிஸ்தான் உளவாளிகள் பேசுவதாக தெரிவித்துள்ளது.

போனில் அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல் எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம். படைகள், முக்கிய நபர்களின் நடமாட்டங்கள் போன்றவை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.