கோப்புப்படம் 
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தியது.  இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார், மால்டி மற்றும் டல்லான் ஆகிய பகுதிகளில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.15 மணியளவில் மற்றொரு துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி அளித்தனர்.