தற்கொலை 
செய்திகள்

தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

விழுப்புரம் அருகே பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் வி.மருதூர்மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ரவிச்சந்திரன் (வயது 26), பெயிண்டர். இவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரவிச்சந்திரனை அவரது தாய் திட்டியுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த ரவிச்சந்திரன், சம்பவத்தன்று தனது வீட்டின் கீற்று கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.