கொள்ளை 
செய்திகள்

ஒரத்தநாட்டில் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஒரத்தநாட்டில் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு டவுன் காளியம்மன் கோவில் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதனை திருடி சென்றுவிட்டனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் திருடி சென்ற உண்டியல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டதாகவும், இந்த உண்டியலில் ரூ.6 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கும் என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளின் தடயங்களை சேகரித்து கோவில் உண்டியலை பணத்துடன் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.