தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 34). விவசாயி. சம்பவத்தன்று இவர் கரைமீண்டார் கோட்டையில் உள்ள ஒரு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.