தஞ்சாவூர்:
ஒரத்தநாடு துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஒரத்தநாடு, பின்னையூர், வெட்டிக்காடு, தெற்குக்கோட்டை, பாப்பாநாடு, ஆம்பலாப்பட்டு, சோழகன்கரை, கருக்காடிப்பட்டி, கக்கரை, பாளம்புத்தூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, பேய்கரும்பன்கோட்டை, கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை சேதுராயன்குடிக்காடு, பொய்யுண்டார்குடிக்காடு, எலந்தவெட்டி, தெக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.