உலக சுகாதார நிறுவனம் 
செய்திகள்

"கவலை அளிக்கும் டெல்டா ரக வைரஸ்" - உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.