கைது 
செய்திகள்

நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

செல்லம்பட்டி புதூரை சேர்ந்த மாயக்கண்ணனை கைது செய்த போலீசார், துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர்-கடத்தூர் செல்லும் சாலையில் கொளகம்பட்டி மைய நாற்றங்கால் பகுதியில், மொரப்பூர் வனச்சரகர் சிவகுமார். வனவர் வேடியப்பன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனத்துறையினரை கண்டவுடன் 3 பேர் தப்பி ஓடினர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி, டார்ச் லைட்டு உள்ளிட்ட பொருட்களுடன் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை விசாரித்தபோது செல்லம்பட்டி புதூரை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 53) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.