முக ஸ்டாலின் 
செய்திகள்

ஒண்டிவீரன் பெயர் நினைவு கூரப்படும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரனின் பெயர் என்றும் நினைவுக்கூரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வருமாறு:-

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்த மாவீரன் ஒண்டிவீரனின் 250-வது நினைவுநாள்.

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரனின் பெயர் என்றும் நினைவுக்கூரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.