நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வடகுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (80). இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளார். கடந்த 2 நாட்களாக மன உளச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய மகள் மாரியம்மாளை பார்ப்பதற்காக மருதுவஞ்சேரி சென்றுள்ளார். நேற்று இரவு 3 மணியளவில் மருதுவஞ்சேரி அருகில் உள்ள ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பேரளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.