திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை பட்டணம் சந்திப்பில் உள்ள வந்தவாசி ரோடை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ ராமமூர்த்தி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.