தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் 
செய்திகள்

பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

நாளை மறுதினம் 1-ந்தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கதேவரின் உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 24-ந்தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு அணிவிக்க தங்கத்தினால் ஆன உலோகத்தினை வங்கியில் இருந்து எடுத்து ஓ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார். தேவர் ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 1-ந்தேதி அவரது மனைவி விஜயலட்சுமி இறந்ததால் 60 நாட்கள் கழித்துதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்பதால் குருபூஜையில் பங்கேற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.

நாளை மறுதினம் 1-ந்தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT