வெளிநாடு வாழ் தொழில் அதிபர் ரவிபிள்ளை 
செய்திகள்

குருவாயூர் கோவிலுக்கு மரகத கிரீடம் காணிக்கை- வெளிநாடு வாழ் பக்தர் வழங்கினார்

குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது.

இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கொரோனா பிரச்சனை காரணமாக தற்போது பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

என்றாலும் வெளிநாடு வாழ் பக்தர்களும் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு விலை உயர்ந்த தங்கம் மற்றும்  வைர நகைகளை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த வெளிநாடு வாழ் தொழில் அதிபர் ரவிபிள்ளை நேற்று தனது  மகன்  மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு விலை உயர்ந்த மரகத கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினார். சுமார் 725 கிராம் மரகதம் மற்றும்  தங்கம் கலந்த இந்த கிரீடத்தின் விலை பல லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கிரீடம் கேரளாவின் பிரபல நகை தயாரிக்கும் நிறுவனம் மூலம் உருவாக்கி உள்ளார். இதற்கு 40 நாட்கள் ஆகி உள்ளது.  18 செ.மீ. உயரம் கொண்ட இந்த கிரீடம் கண்ணை கவர்வதாக இருந்தது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

SCROLL FOR NEXT