லண்டன்:
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்தது. அந்த நிறுவனத்தின் வேக்ஸேவ்ரியா வெர்சன் (Vaxzevria version) இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என வல்லுநர்கள் தெரிவிக்க, உலகின் பணக்கார மற்றும் நடுத்தர நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
பெரும்பாலான நாடுகள் இரண்டு தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக் கொண்டால் தங்களது நாட்டிற்குள் வரலாம் எனத் தெரிவித்துள்ளன. தற்போது உலகளவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன், கோவிஷீல்டு (இங்கிலாந்தில் வேக்ஸேவ்ரியா), கோவேக்சின், ஸ்புட்னிக் வி, சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏராளமான நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என சுலபமாக சென்று வரலாம்.
இதையும் படியுங்கள்...டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தல் - தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்