பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக அகமதாபாத் போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். அதன்பிறகு நித்யானந்தா யூடியூப் சேனலில் தோன்றி வீடியோவில் பேசினார். ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறினார்.
மன்னர் காலத்தில் இருந்தது போன்ற பொற்காசுகளை வெளியிட்டார். மேலும் கைலாசா நாட்டுக்கென புதிய கல்வி கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், நித்யானந்தா அவ்வப்போது ஏதாவது ஒரு கடவுளை போல வேடம் அணிந்து புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு வந்தார். ஏற்கனவே சிவனாகவும், கால பைரவராகவும் நித்யானந்தா வேடமிட்டு இணைய தளத்தில் பகிர்ந்தார்.