திருட்டு 
செய்திகள்

நிலக்கோட்டை அருகே ஆட்டோ திருட்டு

நிலக்கோட்டை அருகே ஆட்டோ திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 23). ஆட்டோ டிரைவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு இவர், சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் ஆட்டோ கிடைக்கவில்லை. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ராஜாமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT