நீரில் மூழ்கி பலி 
செய்திகள்

நெட்டப்பாக்கத்தில் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி

நெட்டப்பாக்கத்தில் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெட்டப்பாக்கம்:

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையம் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா. இவர்களுடைய மகன்கள் சஞ்சய் (வயது 4), கவுதம் (3). இவர்கள் வீட்டின் அருகில் உள்ள ஏரி கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நிரம்பி இருந்தது. இதனை வேடிக்கை பார்க்க நேற்று காலை சிறுவர்கள் இருவரும் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிக்கு வரத்து வரும் வாய்க்காலில் சிறுவர்கள் தவறி விழுந்தனர். அதிகளவில் தண்ணீர் சென்றதால் அதில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையோரம் இருந்த செடியை பிடித்துக்கொண்டு கவுதம் கூச்சலிட்டான். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை மீட்டனர். அப்போது சஞ்சய் ஏரியில் மூழ்கியது குறித்து தெரிவித்தான்.

உடனே அவனை பொதுமக்கள் தேடினர். அப்போது ஏரி வாய்க்காலில் சிறிது தூரத்தில் சஞ்சய் பிணமாக மீட்கப்பட்டான். மகனை இழந்த பெற்றோர் அவனது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.