கைது 
செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

நாட்டறம்பள்ளி அருகே காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த நாகேந்திரா (வயது 35) என்பதும், குட்கா பொருட்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் காரை பறிமுதல் செய்து, நாகேந்திராவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT