சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் டிசம்பர் 23-ந் தேதியை (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம். ‘விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்’. ஆகவே, அவர்கள் உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்தபோது, விவசாயிகள் மட்டும்தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்நாளில் விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.