நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மண்டலத்தில் கூடுதலான கோழி குஞ்சுகள் விடப்பட்டன. அவை தற்போது முட்டையிடும் பருவத்துக்கு வந்து முட்டையிடுகின்றன. இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். அடுத்தது ஹைதராபாத். அதற்கு அடுத்த நிலையில்தான் வட மாநிலங்கள் உள்ளன.
தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 11-ந் தேதி ரூ400 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்து 440 காசுகளாக உயர்ந்துள்ளது. ஆனாலும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
ஆமதாபாத் ரூ.4.50, பெங்களூரு ரூ.4.60, சென்னை ரூ.4.65, சித்தூர் ரூ.4.58, மும்பை ரூ.4.60, விஜயவாடா ரூ.4.30.