கைது 
செய்திகள்

நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளியிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது

நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளியிடம் செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவா (வயது 30). லாரி பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின்மயானம் அருகே பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிவாவிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சிவா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவாவிடம் நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (24) என்பவர் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாக்கியராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.