விபத்து பலி 
செய்திகள்

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விபத்தில் பலி

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள கொக்கர செல்லியூரை சேர்ந்தவர் வீரன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வள்ளிபுரம்-பாலப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் வீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT