நாமக்கல்:
எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாமக்கல் நல்லிபாளையத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சித்த மருத்துவர் பூபதி ராஜா, டாக்டர்கள் மதுபாலா, தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.