நாகர்கோவில்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அவர்கள் 10-வது நாளாக போராட்டம் நடத்தினர். ஆனால் மறியல் போராட்டத்துக்கு பதிலாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் நிறைவடைவதாகவும், அடுத்த கட்டமாக வருகிற 19-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு போராட்டத்துக்கான பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் கூறினார்.