கைது 
செய்திகள்

நாகையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நாகையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஐயப்பன் கோவில் அருகே சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 36) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.