தற்கொலை 
செய்திகள்

நாகமலைபுதுக்கோட்டை அருகே பெண் தற்கொலை

நாகமலைபுதுக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பாண்டி(வயது 58). இவரது மனைவி உமாமகேஸ்வரி(48). இந்தநிலையில் உமாமகேஸ்வரி அவரது கணவர் பாண்டிக்கு போன் செய்து, எனக்கு மன உளைச்சலாக உள்ளது என தெரிவித்து விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகமடைந்த பாண்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது உமா மகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.