கொள்ளை 
செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகமலைபுதுக்கோட்டை:

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூர் யோகா நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 62). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அச்சம்பத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நாணயம், 2 மோதிரங்கள் திருடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.32 ஆயிரத்து 500 ஆகும். இது குறித்து சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.