தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம். 
செய்திகள்

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி, தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் நெல் நாற்றுகளை கைகளில் ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொகுதி செயலாளர்கள் பட்டாணி (ஸ்ரீவைகுண்டம்), மாரி சிவா (தூத்துக்குடி, தாமஸ் (ஓட்டப்பிடாரம்), மருதம் மாரியப்பன் (கோவில்பட்டி), ரமேஷ் (விளாத்திகுளம்), தெற்கு மாவட்ட தலைவர் குளோரியான், மூத்த பொறுப்பாளர் இசக்கிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.