விபத்து பலி 
செய்திகள்

முதுகுளத்தூர் அருகே விபத்தில் முதியவர் பலி

முதுகுளத்தூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 65). இவர் மோட்டார்சைக்கிளில் தம்பல் அருகே சென்றபோது விளாத்திகுளத்தை சேர்ந்த செல்வன் (25) வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உடனே சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தேசிங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.