தற்கொலை 
செய்திகள்

முசிறி ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை

முசிறி ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரசாந்த்(வயது27). பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக ஜெம்புநாதபுரம் போலீசார், பிரசாந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த வேளையில் பிரசாந்த் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த பிரசாந்தை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.