விபத்து பலி 
செய்திகள்

முசிறி அருகே சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி

முசிறி அருகே சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி:

முசிறி அருகே சிந்தம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி மாணிக்கம் (வயது 60). இவர் நேற்று அழகாபட்டி கிராமத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி அருகே சொரியம்பட்டிமேடு அருகே சென்ற போது, கேரளாவில் இருந்து ரப்பர் லோடு ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் மாணிக்கம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT