ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராம பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 23) கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் திமிரியிலிருந்து ஆற்காடு நோக்கி வந்துள்ளார். ஆற்காடு அடுத்த தென்கழனி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மோகன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மோகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.