விபத்து பலி 
செய்திகள்

மோகனூரில் வாகனம் மோதி தொழிலாளி பலி

மோகனூரில் வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மோகனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் வேலாங்குடிபட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் அணியாபுரத்தில் இருந்து ஏ.சி.டி. நகர் நோக்கி மொபட்டில் சென்று கொன்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் மோகனூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.