விபத்து பலி 
செய்திகள்

மோகனூர் அருகே கார் மோதி முதியவர் பலி

மோகனூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாமக்கல்:

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பெரமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குட்டியண்ணன் (வயது 75). இவர் நேற்று காலை நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் வந்தார். பின்னர் மதியம் 2 மணி அளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

நாமக்கல் வள்ளிபுரம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே குட்டியண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.