வாஜ்பாய்-மோடி 
செய்திகள்

நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் -பிரதமர் மோடி புகழாரம்

வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் வாஜ்பாயை நினைவுகூர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு, மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிடுள்ள செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறி உள்ளார். 

மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்றும் கூறி உள்ளார்.