முக ஸ்டாலின் 
செய்திகள்

அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்

தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும், மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.