மதுரை:
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, வருகிற சட்டசபை தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும், இது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறினார்.
அதன்தொடர்ச்சியாக மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம், பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது.
அதில் தமிழகம் முழுவதும் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்திற்கு பின் மு.க.அழகிரி தனது அரசியல் நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.