மாயம் 
செய்திகள்

கணவருடன் ரெயிலில் வந்த இளம்பெண் மாயம்

பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கணவருடன் ரெயிலில் வந்த இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் ரோடு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் யாதவ் (வயது 29), என்ஜீனியர். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த வனிதா (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

புதுமண தம்பதியான இவர்கள் விருந்துக்காக பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் கடந்த 21-ந் தேதியன்று பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் புறப்பட்டனர். இருவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, ரெயிலில் தூங்கினர். மறுநாள் காலை பிரசாத் யாதவ் கண்விழித்து பார்த்தபோது, வனிதாவை காணவில்லை. 

இதனால் பதறிபோன அவர், மனைவியை ரெயில் பெட்டி முழுவதும் தேடினார். ஆனால் அவரை காணவில்லை. ரெயில், நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், இச்சம்பவம் குறித்து பிரசாத் யாதவ் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.